ஒரே ஒரு முட்டை இதெல்லாம் செய்யுமா? இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே..??
ஒரு முட்டை அதாவது ஒரு பெரிய சைஸ் முட்டை வைட்டமின் மாத்திரை என்று கூட சொல்லலாம். ஏனெனில் முட்டையின் வெள்ளை கருவில் பல்வேறு புரதச்சத்துக்கள் உள்ளன. குறிப்பாக அதில் உள்ள கோளின் சத்து முட்டையில் உள்ள கோளின் சத்து மூளை செயல்பாட்டிற்கு முக்கிய பங்கு பொழிகிறது. வளரும் குழந்தைகள் வாரத்திற்கு குறைந்தது இரண்டு நாட்கள் முட்டை சாப்பிட வேண்டும். முட்டை பச்சையாக சாப்பிடுவது நல்லதல்ல. சில நேரங்களில் அதில் உள்ள கிருமிகள் உடனடியாக வயிற்றுக்குள் சென்று விடும்.
இதனால் வயிறு சம்பந்தமான உபாதைகள் ஏற்படக்கூட வாய்ப்பு உள்ளது. எனவே முட்டையை பச்சையாக சாப்பிடுவதை தவிர்த்து விடுங்கள். சமைத்து சாப்பிட்டால் தான் அதில் உள்ள சத்துக்கள் முழுமையாக கிடைக்கும். மஞ்சள் கருவில் கொழுப்பு இருப்பதாக சில தவிர்ப்பது உண்டு. நமக்கு உடலுக்கு கொஞ்சமாவது கொழுப்பு வேண்டும் அது முட்டையின் மஞ்சள் கருவில் பெறலாம் எனவே தாராளமாக முட்டையை சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் சாப்பிடலாம்.ஏனெனில் இதில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் உள்ளது.




