கணினியின் முன்பு அதிக நேரம் வேலை செய்யும் நபரா நீங்கள்..!! உங்களுக்காகத்தான் இந்த பதிவு..!!

இந்த நவீன காலத்தில் அனைவரும் கம்ப்யூட்டரின் முன் அமர்ந்து வேலை பார்க்கும் சூழல் உருவாகியுள்ளது. இதை நாம் என்ன செய்தாலும் தடுக்க முடியாது என்பது நிதர்சனமான உண்மையாகும். இதனால் கண்ணெரிச்சல் கண் சிவப்பாக மாறுதல் அரிப்பு மற்றும் பார்வையில் சிரமம் ஆகிய பிரச்சினைகள் ஏற்படலாம். இதனால் நீண்ட நாட்கள் கணினியின் முன்பு வேலை செய்து கொண்டே இருந்தால் கண்களில் அதிகப்படியான வலி பார்வை குறைபாடு மற்றும் வாழ்க்கையின் தரம் பாதிக்கப்படும்.

ஆகையால் இதிலிருந்து விடுபட கணினியின் முன்பு அமர்ந்திருக்கும் நபர்கள் என்னென்ன செய்ய வேண்டும் என்று இந்த பதிவில் காண்போம். கணினியின் முன்பு அதிகமாக வேலை செய்பவர்கள் ஒரு நாளைக்கு 6 முதல் 8 கிளாஸ் தண்ணீர் நிச்சயமாக குடிக்க வேண்டும். அதுமட்டுமில்லாமல் ஒவ்வொரு 20 நிமிடத்திற்கும் 20 வினாடி கண்களுக்கு ஓய்வு தர வேண்டும்.

நீர் சத்து அதிகமாக இருக்கும் தர்பூசணி வெள்ளரிக்காய் ஸ்ட்ராபெரி ஆகிய பழங்களை சாப்பிடுவது மிகவும் நல்லது. கண்களை அடிக்கடி சிமிட்டுவது ஈரப்பதத்தை நிலைத்திருக்க வைக்கிறது. அது மட்டும் இல்லாமல் கணினியின் முன்பு அமர்ந்து பணியாற்ற அதற்கேற்ற கண்ணாடிகளையும் வாங்கி பயன்படுத்தலாம்.

Read Previous

கொழுப்புக் கல்லீரல் பிரச்சினைகளில் இருந்து வெளிவர இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்..!! அனைவரும் கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!

Read Next

114 காலிப்பணியிடங்களுடன் காத்திருக்கும் வேலைவாய்ப்பு..!! ரூ.1,60,000/- வரை மாத ஊதியம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular