தர்மபுரி ஏரியூர் அருகே ரம்யா (26) என்ற கர்ப்பிணி, ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என்ற ஆசையில் கணவர் கண்ணன், செவிலியர் சுகன்யா மற்றும் புரோக்கர் வனிதா ஆகியோருடன் சேர்ந்து சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்ததில் உயிரிழந்தார். அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டதால் மேல் சிகிச்சைக்காக கோவைக்கு அனுப்பியுள்ளனர். வழியிலேயே ரம்யா உயிரிழந்த நிலையில், போலீசார் நடத்திய விசாரணையில் கருக்கலைப்பு உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதையடுத்து கணவர் கண்ணன் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.



