காலையில் எழுந்தவுடன் பள்ளி குழந்தைகளுக்கு என்ன செய்து கொடுக்கலாம் என்ற குழப்பம் தாய்மார்களுக்கு அதிகமாகவே தான் இருக்கும. அதிலும் ஊட்டச்சத்து உடைய உணவுகளை கொடுக்க வேண்டும் என்று அனைவரும் ஆசைப்படுவார்கள். ஆனால் தினமும் தோசை இட்லி என்று தான் சமைத்து கொடுக்கிறார்கள். இதனால் குழந்தைகள் சலித்து போய்விடுவார்கள். எனவே இன்று சத்தான மற்றும் சுவையான ராகி மாவில் ஒரு டிபனை எப்படி செய்வது என்று இந்த பதிவில் காண்போம்.
தேவையானவை:
ராகி மாவு,
முருங்கை கீரை,
வெங்காயம்,
உப்பு,
வெல்லம்,
நெய்,
தனி மிளகாய் தூள்,
எண்ணெய்
செய்முறை:
ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு அதில் வெங்காயம் சேர்த்து சிறிது நேரம் நன்றாக வதக்கவும். பின்னரில் முருங்கை கீரை மற்றும் உப்பு சேர்த்து தண்ணீர் சிறிதளவு விட்டு மூடி வைத்திருக்க வேண்டும். முருங்கைக்கீரை பாதி வெந்து வரும் நிலையில் அடுப்பை அணைத்து விட்டு ஒரு பாத்திரத்தில் ராகி மாவு மற்றும் வதக்கி வைத்திருக்கும் முருங்கைக்கீரை மற்றும் மிளகாய் தூள் சிறிதளவு வெல்லம் மற்றும் தண்ணீர் ஊற்றி நன்றாக சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
பின் அந்த மாவை ஒரு கைப்பிடி அளவு எடுத்து கையில் தட்டி தோசை கல்லில் போட்டு நெய் ஊற்றி ரொட்டி போல சுட்டு எடுக்கவும். அவ்வளவுதான் சுவையான ராகி மாவு ரொட்டி தயார்.




