கொய்யா இலையில் இவ்வளவு நன்மைகளா..?? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

Oplus_131072

கொய்யா இலையில் இவ்வளவு நன்மைகளா?

01. தலையில் ஏற்படும் அரிப்பிற்கு கொய்யா இலையின் சாற்றினை வாரம் ஒருமுறை மண்டை ஓட்டில் படும்படி தடவி ஊறவைத்து கழுவ வேண்டும்.

02. கொய்யா இலையின் சாற்றினை வாரம் ஒரு முறை தலையில் தடவி ஊற வைத்து கழுவ வேண்டும். இதன் மூலம், பேன் தொல்லையில் இருந்து விடுபடலாம்.

03. ஆண்கள் கொய்யா இலையை டீ போட்டு குடித்து வந்தால், விந்தணுவின் உற்பத்தி அதிகரிப்பதோடு, விந்தணுவின் தரமும் அதிகரிக்கும்.

04. குடி போதையில் உள்ளவர்களுக்கு போதையை உடனே முறிக்க கொய்யா இலையை உண்ண கொடுத்தால் உடனே வெறி இறங்கும் என்பார்கள்.

05. முடி வெடிப்புகளை தடுப்பதற்கு, கொய்யா இலையை அரைத்து பேஸ்ட் செய்து கூந்தலில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் அலச வேண்டும்.

06. கொய்யா இலையை 20 நிமிடங்கள் தண்ணீரில் கொதிக்க வைத்து குளிர்ந்த பிறகு தலையில் மசாஜ் செய்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.

07. கொய்யா இலைகளை நன்கு கழுவி சுடுதண்ணீரில் கொதிக்கவிட்டு தேநீர் போன்று குடித்து வந்தால் கொழுப்பை குறைக்கும். மேலும் வயிற்று போக்கினால் அவதிபடுபவர்களுக்கு சிறந்த சிகிச்சையளிக்கும்.

08. கொய்யா இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கசாயம், இருமல், தொண்டை மற்றும் இதய சம்பந்தமான நோய்களுக்குத் தீர்வு தருகின்றது.

09. கொய்யா இலையின் சாற்றை எடுத்து அதனுடன் தேன் கலந்து தினமும் சாப்பிட்டு வருவதால் விரைவில் எடை குறையும்.

10. கொய்யா இலையை சாதாரணமாக வாயில் போட்டு மென்றும் அல்லது கொய்யா இலையில் டீ செய்து சாப்பிட்டு வந்தாலும், வாயில் ஏற்படும் பல் வலி, ஈறு பிரச்சனைகள், வாய்ப்புண் மற்றும் தொண்டைப் புண் ஆகியவை உடனே தீர்ந்து விடும்.

 

Read Previous

தினமும் 30 நிமிடங்கள் வெறும் காலுடன் தரையில் நடப்பதால் இவ்வளவு நன்மையா..??

Read Next

ஓட்டப்பயிற்சிக்கு பின் இவற்றை எல்லாம் செய்ய கூடாது.. ஏன் தெரியுமா..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular