வீட்ல இருக்க பெரியவங்க சொல்லுவாங்க வாரத்துல ஒரு தடவை கொள்ளு சட்னி சாப்பிடுங்கன்னு. ஆனால் நம்மில் பலரும் அதோட ஆரோக்கிய பயன்கள் தெரிந்தும் கூட அது எப்படி பண்றதுன்னு தெரியாம அதை பண்ணவே மாட்டோம். அந்த வகையில கொள்ளு சட்னி எப்படி பண்றதுன்னு இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
கொள்ளு சட்னி
தேவையான பொருட்கள்:
கொள்ளு – 1 கப்
வெங்காயம் – 2
தக்காளி – 1
பூண்டு – 6 பல்லு
சீரகம் – 1 டீஸ்பூன்
தனியா – 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 3
புளி – சிறிது
கறிவேப்பிலை – சிறிது
எண்ணெய், உப்பு – தேவையான அளவு
செய்முறை:
முதலில் தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.கொள்ளு, நறுக்கிய தக்காளி இரண்டையும் சேர்த்து வேக வைத்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயம், சீரகம், தனியா, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
வெங்காயம் வதங்கியவுடன் வேகவைத்த கொள்ளு, தக்காளியுடன் பூண்டு சேர்த்து 2 நிமிடம் வதக்கி இறக்கவும்.பின்னர் இதனுடன் ஊற வைத்த புளி, உப்பு சேர்த்து மிக்சியில் போட்டு அரைத்து எடுத்து கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.இப்போது சுவையான கொள்ளு சட்னி தயார்.
சட்னி அரைக்கும் போது கொள்ளு வேக வைத்த நீரை பயன்படுத்தவும்.அரைக்கும் போது 5 நறுக்கிய சின்ன வெங்காயத்தை பச்சையாக சேர்த்து அரைத்தால் நன்றாக இருக்கும்.




