கொழுப்பு கல்லீரல் நோய்..!! கண்டிப்பாக அனைவரும் இந்த பதிவை படிங்க..!!

Oplus_131072

*கொழுப்புக் கல்லீரல் நோய் – Fatty Liver.*

அதிகம் ஆல்கஹால் அருந்துபவர்களுக்கு கல்லீரலில் அதிகக் கொழுப்பு சேர்ந்து (Fatty Liver) கொழுப்புக் கல்லீரல் நோய் ஏற்படலாம். சில சமயங்களில் ஆல்கஹால் அருந்தாதவர்களுக்கும் கூட, கொழுப்பு கல்லீரலில் சேர்ந்து ஃபேட்டி லிவர் ஏற்படலாம்.

√ சர்க்கரை நோய் இருப்பவர்கள், அதிக உடல் பருமன் உள்ளவர்களுக்கு, கல்லீரலில் கொழுப்பு அதிகம் சேரும்போது 20 – 30 வருடங்கள் கழித்துக் கல்லீரல் சிதைவு ஏற்பட வாய்ப்பு உண்டு.

√ குளிர்பானங்களில் உள்ள அதிகப்படியான சர்க்கரை, நொறுக்குத் தீனிகள் சாப்பிடும் போது அதில் உள்ள கொழுப்புக்கள் கல்லீரலில் சேர்ந்து நாளடைவில் ஃபேட்டி லிவர் பிரச்னை ஏற்படும்.

*கல்லீரலை வலுப்படுத்த.*

√ கல்லீரலில் பிரச்னை என்றவுடன் மதுவை நிறுத்திவிட்டு, ஆயுர்வேத மருந்தான திராக்ஷாதி இரசாயனம் என்கிற லேகியத்தை அருகில் உள்ள ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனையை பெற்று சாப்பிட ஆரம்பிக்கலாம். இது திராட்சை, திப்பிலியால் செய்யப்பட்ட கல்லீரலை வலுப்படுத்தக்கூடிய லேகியமாகும்.

√ நெல்லிக்காய் போட்டுக் காய்ச்சிய குடிநீர் குடிப்பதற்குச் சிறந்தது.

√ வீட்டின் அருகில் கீழாநெல்லி செடி இருந்தால் அதைப் பறித்து வேரை நீக்கி அரைத்துக் காலை வெறும் வயிற்றில், புளிக்காத மோரில் 10 கிராம் கலந்து சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

* கீழாநெல்லி பொடியாகவும் நாட்டுமருந்து கடைகளில் கிடைக்கிறது அதை வாங்கி ஒரு டீஸ்பூன் அளவு ஒரு கிளாஸ் புளிக்காத மோரில் கலந்து அருந்தலாம்.

√ வெறும் வயிற்றில் 2, 3 செம்பருத்தி பூக்களை சாப்பிட்டால் கல்லீரல் பாதிப்புகள் குறையும்.

*உணவில் சேர்க்க வேண்டியது.*

பீட்ருட், பச்சை நிறக் காய்கறிகள், முக்கியமாக பீன்ஸ் சேர்க்க வேண்டும், தக்காளி, திராட்சை, ஆப்பிள், அவகோடா, பூண்டு, மஞ்சள், கிரீன் டீ, அக்ருட் பருப்பு, ஆகியவற்றை உணவில் அடிக்கடி சேர்க்க வேண்டும்.

*கல்லீரல் காக்கும் இயற்கை உணவுகள்.*

கல்லீரல் பிரச்னைகள் வருகிற வரைக்கும் அதன் நலன் பற்றிப் பெரும்பாலும் யாரும் சிந்திப்பதே இல்லை. நாம் சாப்பிடுகிற ஒவ்வோர் உணவும் ஏதாவது ஒரு வடிவில் கல்லீரலைச் சென்றடையும் என்பது உங்களுக்குத் தெரியுமா? கடைசியாகச் சாப்பிட்ட சாப்பாடு, வேலை முடிந்த பிறகு குடித்த குளிர்பானம் அல்லது உட்கொண்ட மருந்தும்கூட கல்லீரலை அடைந்திருக்கும். எனவேதான், `கல்லீரலுக்கு நன்மை செய்யும் உணவுகளைச் சாப்பிட வேண்டும். கல்லீரலைப் பாதிக்கும் உணவுகளைத் தவிர்க்க வேண்டும்’ என அழுத்தமாகச் சொல்கிறார்கள் மருத்துவர்கள்.

√ திராட்சை, விஷ்ணு கிரந்தி, இஞ்சி, மஞ்சள், முட்டை, நெல்லிக்காய், வால்நட், பீட்ரூட் போன்றவை கல்லீரலைப் பாதுகாக்க உதவுவதாக ஆராய்ச்சிகள் சொல்கின்றன. மதுசாரா கல்லீரல் நோயிலிருந்தும் (Non-Alcoholic Fatty Liver Disease) இந்த உணவுகள் நம்மைக் காப்பாற்றுகின்றன.

√ மணமுள்ள காய்கறிகளான வெங்காயம், பூண்டு போன்றவை நச்சுப்பொருட்களை வெளியேற்றி, கல்லீரலைச் சுத்திகரிக்கக்கூடியவை. கல்லீரலைச் சுத்திகரிக்கவும் பாதுகாக்கவும் உதவும் உணவுப் பொருட்களை ஒவ்வொன்றாகப் பார்ப்போம். ஆனாலும், ஏற்கெனவே கல்லீரல் தொடர்பான நோய்கள் இருப்பவர்கள், மருத்துவரின் ஆலோசனையைக் கேட்ட பிறகுதான் இவற்றைப் பயன்படுத்த வேண்டும்.

*இஞ்சி.*

இஞ்சி கல்லீரல் பாதுகாப்பிலும் முக்கிய பங்காற்றுகிறது. இஞ்சி உடலின் செரிமான மண்டலத்தைச் சீராக்கும். வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கும். மதுசாரா கல்லீரல் நோய் ஏற்பட வாய்ப்புகள் உள்ளவர்கள், கண்டிப்பாக இஞ்சியை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

*ஒமேகா-3 நிறைந்த உணவுகள்.*

கல்லீரலைப் பாதுகாக்க தினசரி உணவில் ஒமேகா-3 அதிகமுள்ள உணவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். வஞ்சிர மீன், முட்டை, வால்நட் போன்றவற்றில் ஒமேகா-3 உள்ளது. கல்லீரலில் கொழுப்பு சேரும் நிகழ்வை (Triglyceride Synthesis) ஒமேகா-3 உணவுகள் தடுக்கின்றன.

*காய்கறிகள்.*

முட்டைக்கோஸ், புரோக்கோலி, காலிஃபிளவர் போன்றவற்றில் சல்ஃபர் நிறைய உண்டு. இவற்றில் உள்ள குளுக்கோசினோலேட் (Glucosinolate) என்ற சல்ஃபர் கலந்த கலவை, என்ஸைம் உற்பத்தியை அதிகரித்து உடலின் நச்சு நீக்கத்துக்கு உதவும்.

*ஸ்ட்ராபெர்ரி.*

ஸ்ட்ராபெர்ரியில் பாலிபினால் (Polyphenols) மற்றும் அந்தோசயனின் (Anthocyanins) அதிகம் உள்ளன. இவை வீக்கம், கட்டி முதலியவற்றுக்கு எதிராகச் செயல்படுபவை. இவை சக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட்களும் கூட.
ஸ்ட்ராபெர்ரி கல்லீரலில் கொழுப்பு சேர்வதைத் தடுக்கும்.

Read Previous

தங்கம் குரு பிரகஸ்பதி உலோகம் அதை கேரள பெண்கள் ஏன் கால்களில் அணிகிறார்கள் தெரியுமா..??

Read Next

பெண்களுக்கு வேதனை தரும் வெள்ளை படுதல் பற்றிய தகவல்களும்.. இயற்கை வைத்தியமும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular