கோழி இறைச்சி சாப்பிட்டதால் உயிரிழந்த இரண்டு வயது சிறுமி..!! மக்களே உஷார்..!!

நம் அனைவருக்கும் இறைச்சி என்றாலே மிகவும் பிடிக்கும். இதிலும் சிக்கன் என்றால் விலையும் குறைவு சுவையும் அதிகம். வாரம் ஒரு முறையாவது வீட்டில் சமைப்போம். அதுமட்டுமில்லாமல் இரண்டு நாட்களில் ஒருமுறையாவது கடையில் வாங்கி சாப்பிட்டு விடுவோம். ஆனால் இப்பொழுது இந்த இறைச்சி சாப்பிட்டதால் உயிரிழந்த ஒரு சிறுமியை பற்றி காண்போம்.

ஆந்திர மாநிலத்தில் பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுமி உயிர் இழந்தார். இந்த சிறுமிக்கு இரண்டு வயது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு காரணம் வேக வைக்காத இறைச்சியை சாப்பிட்டதால் தான் என்று பலர் கூறுகின்றனர். இதனையடுத்து உடல்நிலை பாதிக்கப்பட்ட காரணமாக இந்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதேபோன்று 2021 ஆம் ஆண்டு ஹரியானாவில் 11 வயது சிறுவன் உயிரிழந்தான். அந்த சிறுவனும் வேக வைக்காத இறைச்சியை சாப்பிட்டதால் தான் உயிரிழந்தான் என்று கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து இது இரண்டாவது உயிரிழப்பு. ஆகையால் இறைச்சியை நன்கு வேக வைத்து சாப்பிடுவது மிகவும் நல்லது. அதையும் அளவோடு சாப்பிட்டால் இன்னும் சிறந்தது.

Read Previous

மாலை நேரத்தில் பூக்களை பறித்தால் இத்தனை பிரச்சனைகளா..!! என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்..!!

Read Next

இந்த ஜூஸ் குடித்தால் இத்தனை நன்மைகளா..!! கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular