சிறியவர்களில் இருந்து பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் மசாலா வேர்க்கடலை செய்வது எப்படி..??

Oplus_131072

மசாலா வேர்க்கடலை என்றால் யாருக்கு தான் பிடிக்காது சிறியவர்களில் இருந்து பெரியவர்கள் வரை ஏன் வயதானவர்கள் வரை கூட அனைவருக்கும் இந்த மசாலா வேர்க்கடலை மிகவும் பிடிக்கும். நமது முன்னோர்களின் காலகட்டத்தில் எல்லாம் இதுதான் ஒரு மிகப்பெரிய சிற்றுண்டியாக இருந்தது. இந்நிலையில் வீட்டிலேயே மிகவும் சுவையான மசாலா வேர்கடலை எவ்வாறு செய்யலாம் என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.

தேவையானவை:

வேர்க்கடலை – ஒரு கப், மிளகாய்த்தூள்- கால் டீஸ்பூன், எண்ணெய் – டீஸ்பூன், பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை, கடலை மாவு – 2 டீஸ்பூன், அரிசி மாவு – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் வேர்க்கடலையை போட்டு, ஒரு கை தண்ணீர் தெளித்துப் பிசிறி வடிகட்டவும். உப்பு, எண்ணெய், மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், கடலை மாவு, அரிசி மாவு சேர்த்து பிசிறினாற் போல கலக்கவும். கலவையை பேப்பர் தட்டில் பரவலாக வைத்து ‘மைக்ரோவேவ் அவன்’ உள்ளே 2 நிமிடம் வைத்து எடுத்து, கலந்து ஆறவிட்டால்… மசாலா வேர்க்கடலை தயார்!

குறிப்பு: ‘மைக்ரோவேவ் அவன்’ இல்லாதவர்கள் வேர்க்கடலை கலவையை, எண்ணெயில் பொரித்து சாப்பிடலாம்.

 

Read Previous

இன்று நீங்கள் உங்கள் பெற்றோரை எவ்வாறு பார்த்துக் கொள்கிறீர்களோ அதே மாதிரி தான் நாளை உங்கள் பிள்ளைகள் உங்களைப் பார்த்துக் கொள்ளும் என்பதை உணர வைத்த அருமையான பதிவு..!!

Read Next

நாம் அனைவரும் வாழ்க்கையில் கற்றுக் கொள்ள வேண்டிய முக்கியமான பதிவு தான் இது..!! படித்ததில் ரசித்தது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular