கோலா உருண்டை என்பது தமிழ்நாட்டின் காரைக்குடி என்ற சிறிய நகரமான செட்டிநாட்டின் பிரபலமான உணவாகும்.
செட்டிநாடு ஸ்டைல் உணவு என்றாலே அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். இந்தக் கோலா உருண்டையை பொதுவாக பீட்ரூட் மற்றும் வாழைப் பூ வைத்து செய்வது வழக்கம்.
ஆனால் இன்று மட்டன் வைத்து எப்படி கோலா உருண்டை செய்யலாம் என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- வெள்ளாடு இறைச்சி – 1 கிலோ (பொடியாக வெட்டப்பட்டது)
- மிளகாய் தூள் – 12 கிராம்
- மஞ்சள் தூள் – 4 கிராம்
- உப்பு – சுவைக்க
- நறுக்கிய பச்சை மிளகாய் – 10 கிராம்
- நறுக்கிய பூண்டு – 20 கிராம்
- நறுக்கிய கொத்தமல்லி – 30 கிராம்
- எலுமிச்சை சாறு – 5 மிலி
- எண்ணெய் – 225 கிராம்
அரைக்கவும்
- துருவிய தேங்காய் – 25 கிராம்
- இலவங்கப்பட்டை – 2 கிராம்
- கிராம்பு – 1 கிராம்
- பாப்பி விதைகள் – 10 கிராம்
- வறுத்த பருப்பு – 15 கிராம்
சட்னி
- தண்டு கொண்ட கொத்தமல்லி இலைகள் – 50 கிராம்
- பச்சை மிளகாய் – 15 கிராம்
- சிவப்பு மிளகாய் – 7.5 கிராம்
- புளி கரைசல் – 15 கிராம்
- கடுகு – 5 கிராம்
- தக்காளி – 30 கிராம்
- வெல்லம் – 5 கிராம்
- உப்பு – சுவைக்க
செய்முறை
- முதலில் மிக்ஸியில் இறைச்சியை சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
- பின் ஒரு பாத்திரத்தில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு, பச்சை மிளகாய், நறுக்கிய பூண்டு, நறுக்கிய கொத்தமல்லி, எலுமிச்சை சாறு சேர்த்து அதனுடன் இறைச்சி சேர்த்து கலந்துக்கொள்ளவும்.
- அடுத்து ஒரு மிக்ஸியில் தேங்காய் துருவல், இலவங்கப்பட்டை, கிராம்பு, கசகசா, வறுத்த உளுத்தம்பருப்பு சேர்த்து அரைக்கவும்.
- இந்த அரைத்த கலவையை இறைச்சி கலவையுடன் சேர்த்து நன்கு கிளறவும்.
- பின் இதை ஒரு சிறிய உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
- சட்னி செய்வதற்கு வழங்கிய பொருட்களை சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
- இறுதியாக கோலா உருண்டையுடன் இந்த சட்னியில் பரிமாறலாம்.




