செல்வத்தை வாரி குவிக்கும் வெள்ளை எருக்கஞ்செடியின் மகிமையை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம். வெள்ளை எருக்கன் செடியை வீட்டின் முன்புறம் வளர்த்தால் வீட்டில் செல்வம் கொழிக்கும். வீட்டிற்குள் துஷ்ட ஆவிகள் நுழையாது. பில்லி , சூனியம், செய்வினை போன்றவற்றால் வீட்டில் வசிப்பவர்களுக்கு பாதிப்பே வராது. வெள்ளருக்கு சிவனாருக்கு உகந்தது என்பர். வெல் எருக்கு செடி வீட்டின் முன் வைப்பது விசேஷம். அதன் வளர்ச்சி வீட்டில் செல்வ செழிப்பை ஏற்படுத்தும். நவகிரகங்களில் எருக்கன் செடி சூரிய பகவானின் தன்மை கொண்ட ஒரு செடி. வெள்ளருக்கு அதிர்ஷ்டம் புதையல் இருக்கும் இடங்களில் அதிகம் வளரும் என்பதால் அந்த செடி வீட்டின் முன் நன்கு வளர்ந்தால் அது போன்ற அதிர்ஷ்டத்தை வீட்டுக்கு அழைத்து வரும்.




