டீ குடித்தால் இந்த பிரச்சனைகள் எல்லாம் வருமா..!! டீ பிரியர்களே உஷார்..!!

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி குடிக்கும் ஒரு பாணம் டீ ஆகும்.  இந்த பழக்கம் அதிகளவில் மக்களிடையே காணப்படுகிறது. மேலும் சிலர் டீயை தான் ஒருநேர உணவாக நினைக்கிறார்கள். இந்த டீ குடிக்கும் பொழுது நமக்குள் ஒரு உற்சாகம் ஏற்படும். அதுமட்டுமில்லாமல் உடல் சோர்வை கட்டு படுத்த பலர் டீ குடிக்கின்றனர்.

அனால், அளவுக்கு மீறி இதை குடிப்பது நமது உடம்பில் இருக்கும் இரும்புச்சத்தை குறைகிறது. ஒருநாளைக்கு 3 கப் வரை டீ குடித்தால் ஒன்றும் பாதிப்பில்லை. ஏனெனில் இப்படி குடிப்பதன் மூலம் உடல் ஆற்றல் அதிகரிக்கும், ஆக்சிஜனேற்றி ஆரோக்கியப்படும். மேலும்,  ஐசிஎம்ஆர் எனப்படும் இந்தியாவை சேர்ந்த மருத்துவ கவுன்சிலின் பரிந்துரை இதுவே.

ஒரு நாளைக்கு 4 முதல் 5 கப், அதற்கும் மேல் என டீ குடிப்போருக்கு தூக்கமின்மை ஏற்படும், பதற்றம் உண்டாகும். இந்த பிரச்சனைகள் நாட்கள் நகர நகர, காரணம் புரியாமல் மறைமுக அறிகுறியாக ஏற்பட தொடங்கும். காலை எழுந்தவுடன்  வெறு வயிற்றில் அதிகம் டீ குடிப்பது வாயு மற்றும் உடலில் அமிலத்தன்மையை உண்டாக்கும்.

டீ-காபியில் இருக்கும் டானின் எனப்படும் வேதிப்பொருள் இரும்பு சத்துக்களை குறைக்கும். நாளொன்றுக்கு 5 கப் மேல் டீ குடித்தால், ரத்த சோகை பிரச்சனை அதிகரிக்கும். அதிகம் டீ குடிப்பது இதய துடிப்பை தடுமாற செய்யும். முடிந்த வரை பால், பாதம் பால், மசாலா டீ எனப்படும் தேயிலை இல்லாத டீ வகைகள் போன்றவற்றை குடிப்பது நல்லது.

Read Previous

கரூர் மாவட்டம் குளித்தலையில் 6 அடி நீள சாரை பாம்பால் பரபரப்பு..!!

Read Next

முருங்கைக்கீரையை வைத்து பொடி கூட பண்ணலாமா..!! கட்டாயம் பார்க்கவேண்டிய செய்முறை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular