தனுஷ் நடிப்பில், ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் வெளியான ‘தேரே இஷ்க் மெய்ன்’ பாலிவுட் படம் கடந்த 28ம் தேதி வெளியானது. கிரித்தி சனோன் ஜோடியாக நடித்துள்ள இந்தப் படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. படத்தின் கலவையான விமர்சனங்களுக்கு மத்தியிலும், பாக்ஸ் ஆபிஸ் விவரங்களின்படி, ‘தேரே இஷக் மெய்ன்’ படம் 5 நாட்களில் ரூ.72.71 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது. தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைப்பதால், படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



