AlIMS மருத்துவமனை குறித்து விமர்சித்த முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார். விளம்பர ஷூட்டிங் செய்யும் நேரத்தில், AllMS கட்டிடப் பணிகளை சென்று பார்வையிட்டிருந்தால், பணிகள் எவ்வளவு நிறைவு பெற்றிருக்கிறது என்பது தெரிந்திருக்கும் என்று சாடிய அவர், இதே மதுரையில், வேளாண் பல்கலை., அமைப்பதாக சொல்லி 4 ஆண்டுகள் ஆகின்றன. ஒரு செங்கலைக் கூட இன்னும் எடுத்து வைக்கவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார்.
முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள், விளம்பர ஷூட்டிங் செய்யும் நேரத்தில், மதுரை எய்ம்ஸ் கட்டிடப் பணிகளைச் சென்று பார்வையிட்டிருந்தால், பணிகள் எவ்வளவு நிறைவு பெற்றிருக்கிறது என்பது தெரிந்திருக்கும். தனது மாநிலத்தில் நிறைவேற்றப்படும் ஒரு முக்கியமான திட்டத்தைச் சென்று பார்வையிடுவதை… https://t.co/ahdKKBqvPA
— K.Annamalai (@annamalai_k) June 17, 2025




