Oplus_131072
நம் முன்னோர்களின் காலகட்டத்தில் இருந்தே குழந்தைகளுக்கு நிலா சோறு ஊட்டுவார்கள். இன்றும் பல வீடுகளில் இந்த பழக்கம் மட்டும் பின்பற்றப்பட்டு வருகிறது. குழந்தைகளுக்கு நிலாச்சோறு ஏன் ஊட்டுகிறார்கள் அதற்கான காரணம் என்ன என்பது நம்மில் பலருக்கும் தெரியாது. அதைப் பற்றி நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.
குழந்தைகளுக்கு சாப்பாடு ஊட்டுவது என்பது இந்த காலகட்டத்தில் இருந்து நம் முன்னோர்கள் காலகட்டம் வரைக்கும் விளையாட்டு காரியம் அல்ல. அதற்காகத்தான் குழந்தைகளுக்கு நிலாவை காட்டி சோறு ஊட்டினார்கள் என்றும் பலர் கூறுகிறார்கள். ஆனால் இதற்கான உண்மையான காரணம் அறிவியல் ரீதியாக குழந்தை கருவில் இருக்கும் போது தாயின் தொப்புள்கொடி வழியாக குழந்தைக்கு உணவு செல்கிறது. குழந்தை பிறந்த பிறகு தொப்புள் கொடி உடலில் இருந்து பிரிந்து பின்பு தான் உணவுக் குழலின் விட்டம் விரியத் தொடங்குகிறது. இது முழுமையாக முழுமை அடைய ஐந்து வருடம் ஆகுமாம். இதனால் நிலாவை காட்டி சோறு ஊட்டும் போது குழந்தை மேல்நோக்கி பார்க்குமாம் தொண்டை மற்றும் உணவுக் குழல் விரிவடையுமாம் அப்போது உணவு ஈசியாக இரைப்பையை நோக்கி இறங்குமாம். மேலும் தொண்டை குழலில் கீழ்நோக்கி இறங்கும் அலைவு இயக்கங்கள் மற்றும் செரிமான ஊமைகளுக்கு நல்ல பயிற்சி கிடைக்குமாம். இதனால் குழந்தைகளுக்கு எளிதில் செரிமானம் ஆகிவிடுமாம். நிலாவை காட்டி சோறு ஊட்டும் போது குழந்தைகள் உணவில் ஆர்வம் செலுத்துகிறார்கள் என்பதும் ஒருவகையான காரணம். இந்த காலகட்டத்தில் ஒரு சில தாய்மார்கள் தான் நிலாச்சோறு ஊட்டுகிறார்கள். ஒரு சில தாய்மார்கள் செல்போனை காண்பித்தும் டிவியை காட்டும் தான் குழந்தைகளுக்கு உணவு ஊட்டுகிறார்கள். கண்டிப்பாக குழந்தைகளுக்கு நிலா சோறு ஊட்டங்கள் நன்மையை பெறுங்கள்.




