திருப்பரங்குன்றம் தீப வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு வழங்கிய தீர்ப்பு நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கையைத் தகர்ப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தத் தீர்ப்பு அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. தமிழ்நாட்டின் மதநல்லிணக்கச் சூழலை சீர்குலைப்பதாகவும் அமைந்துள்ளது. ஆதாரங்களின் அடிப்படையில் தீர்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்ற சட்டப்படியான வழிமுறைக்கு மாறாக, நம்பிக்கைகளின் அடிப்படையில் தீர்ப்புகள் வழங்கப்படுகிறது என கூறியுள்ளார்.




