வடகிழக்குப் பருவமழையின் காரணமாக பல்வேறு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு மற்றும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பள்ளிக் கட்டடங்களின் பாதுகாப்பை உறுதி செய்யும்படி பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக, பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் அனைத்து பள்ளி நிர்வாகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், பள்ளிக் கட்டடங்களின் நிலை குறித்து ஆய்வு செய்து, பழுதடைந்த மற்றும் ஆபத்தான நிலையில் உள்ள கட்டடங்களை உடனடியாக பராமரிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.




