பழங்களை தோலோடு சாப்பிட்டால் நல்லதா தோல் இல்லாமல் சாப்பிட்டால் நல்லதா..!! அனைவரும் கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!

நமது உடலின் ஆரோக்கியத்திற்கும் ஊட்டச்சத்திற்காகவும் நாம் அதிகமாக பழங்களை சாப்பிடுவது வழக்கம். ஆனால் நமது உடலுக்கு ஆரோக்கியம் தர சாப்பிடும் உணவுகளை சரியாக சாப்பிட வேண்டும். அப்படி நமக்கு பழங்களை சாப்பிடும் போது ஒரு குழப்பம் நிச்சயமாக இருக்கும். அதாவது பழங்களை தோலுடன் சாப்பிட்டால் நல்லதா தோல் இல்லாமல் சாப்பிட்டால் நல்லதா என்று. அதைப்பற்றி இந்த பதிவில் தெளிவாக காண்போம்.

பழங்களில் தோலுரித்து சாப்பிடும் பழம் என்றும் தோலுடன் சாப்பிடும் பழம் என்றும் வகைகள் இருக்கின்றன. மேலும் பழங்களை தோலுடன் சாப்பிடுவது மிகவும் நல்லது என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர். திராட்சை மாம்பழம் சப்போட்டா கொய்யா சாத்துக்குடி ஆப்பிள் போன்ற பழங்களில் தோல் நிச்சயமாக இருக்கும். நார்சத்து அதிகமாக இருக்கும் காரணத்தினால் அதை எல்லாம் தோலோடு சாப்பிட வேண்டும்.

ஆப்பிள் பழத்தின் தோலில் கால்சியம் பொட்டாசியம் வைட்டமின் ஏ வைட்டமின் சி போன்ற சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. இந்த சத்துக்கள் இதய நோயாளிகளுக்கு மிகவும் நல்லதாகும். ஆப்பிளை தோலுடன் சாப்பிட்டால் தான் நமக்கு நன்மைகள் கிடைக்கும். அதுபோல கொய்யாப்பழத்தில் சருமத்தை காக்கும் வைட்டமின்கள் அதிகமாக இருக்கின்றன.

ரத்த கொழுப்பையும் கரைக்கு இது மிகவும் உதவுகிறது. வாழைப்பழத் தோலில் கால்சியம் அதிகமாக இருக்கிறது. இது நமது உடலுக்கு பல நன்மைகளை தருகிறது. மேலும் தக்காளியை தோலோடு சாப்பிட்டால் அதில் உள்ள வைட்டமின் ஏ வைட்டமின் சி கால்சியம் போன்ற சத்துக்கள் நமது உடலுக்கு கிடைக்கும்.

Read Previous

அத்தி பழம் சாப்பிடுவதனால் இத்தனை நன்மைகளா..!! அனைவரும் கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!

Read Next

பாகற்காய் சாப்பிடுவதனால் இத்தனை நன்மைகளா..!! அனைவரும் கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular