ஒரு காயில் அதிக அளவு நற்குணங்கள் அடங்கி குழந்தைகள் சாப்பிட அடம் பிடிப்பார்கள் என்றால் அது பாகற்காய் தான். அவ்வளவு என் பெரியவர்கள் கூட நிறைய பேர் இதை சாப்பிட மாட்டார்கள். காரணம் இதில் இருக்கும் கசப்பு தன்மை. அதே வேளையில் அனைவருக்கும் மிகவும் பிடித்த ஒன்று ஐஸ்கிரீம். அப்படி கசப்பே இல்லாமல் பாகற்காயை வைத்து ஐஸ்கிரீம் எப்படி செய்வது என்று இந்த பதிவில் தெளிவாக காண்போம்.
தேவையான பொருட்கள்:
பாகற்க்காய் – 2
டூட்டி ஃப்ரூட்டி – 2 ஸ்பூன்
உப்பு – சிறிதளவு
பால் – 1 கப்
ஃபிரஷ் கிரீம் – 1 கப்
பால் பவுடர் – 1 கப்
கண்டன்ஸ்ட் மில்க் – ½ கப்
செய்முறை:
பாகற்காயை நன்றாக சுத்தம் செய்து விதையை நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தை எடுத்து தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க விட்டு பாகற்காயை அதில் போட்டு விடவும். இப்படி நான்கு முறை செய்ய வேண்டும். இப்படி செய்வதன் மூலம் கசப்புத்தன்மை குறைந்துவிடும்.
வெந்த பாகற்காயை நன்றாக ஆற வைக்கவும். ஒரு ஜாரில் பால் பிரெஷ் கிரீம் பால்பவுடர் ஆகியவற்றை சேர்த்து அரைத்துக் கொள்ளவும். இதனுடன் கண்டன்ஸ்டு மில்க் மற்றும் வெந்த பாகற்காயை சேர்த்து மீண்டும் அரைக்கவும்.
இந்த கலவையை ஒரு பாத்திரத்தில் ஊற்றி 8 மணி நேரம் ஃப்ரீசரில் வைக்கவும். அவ்வளவுதான் சுவையான மற்றும் சத்தான குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும், பாகற்காய் ஐஸ்கிரீம் தயார்.




