பிரச்சனைகள் வந்த
வழியே செல்ல ரகசியம் தெரியுமா?
ஒரு டம்ளர் தண்ணீரில் சிறிதளவு மஞ்சள்தூள் சேர்த்துக்கொள்ளுங்கள். இதனுடன் ரெண்டு சிட்டிகை அளவிற்கு பச்சை கற்பூரத்தை சேர்த்துக் கொள்ளுங்கள் இதனுடன் கால் ஸ்பூன் அளவிற்கு கல் உப்பு போட்டு எதுவும் செய்யாமல் அப்படியே கொண்டு போய் அந்த டம்ளரை வடகிழக்கு மூலையில் வைத்து விடுங்கள். வாரம் ஒரு முறை வியாழன் கிழமையில் இந்த கண்ணாடி டம்ளரில் இருக்கக்கூடிய தண்ணீரை மண்ணில் ஊற்றிவிட்டு புதிதாக தண்ணீர் ஊற்றி இதே போல செய்து வைக்க வேண்டும். உங்கள் வீட்டிலும் பிரச்சனைகள் பறந்தோடும், எப்போதும் மகிழ்ச்சி உண்டாகும்.



