பூண்டு வெங்காய தொக்கு இப்படி செஞ்சு பாருங்க..!! அம்புட்டு ருசியா இருக்கும்..!!

Oplus_131072

பூண்டு – வெங்காய தொக்கு செய்வது எப்படி …

தேவையான பொருட்கள் :::

உரித்த பூண்டு – 200 கிராம்
சின்ன வெங்காயம் – ஒரு கிலோ மிளகாய்த்தூள் – 50 கிராம்
புளி – சாத்துகுடி அளவு
சீரகம் – 2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் – ஒரு டீஸ்பூன்
கடுகுப்பொடி – ஒரு டேபிள்ஸ்பூன் வினிகர் – 2 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய், உப்பு – தேவையான அளவு….

செய்முறை:

பூண்டுடன் வெங்காயத்தை சேர்த்து கரகரப்பாக அரைக்கவும். புளியை சிறிது தண்ணீரில் ஊற வைத்து, கெட்டியாகக் கரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சீரகம் தாளிக்கவும். அரைத்து வைத்திருக்கும் பூண்டு – வெங்காய விழுதை அதில் சேர்த்து வதக்கி, புளிக் கரைசலை விடவும். நன்றாகக் கெட்டி பதத்தில் வந்ததும்… உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்துக் கிளறவும். பிறகு, அடுப்பிலிருந்து இறக்கி, ஆற வைத்து, கடுகுப்பொடி, வினிகர் சேர்த்துக் கிளறவும்….

Read Previous

நகை வியாபாரி..!! அருமையான கதை..!! படித்ததில் மிகவும் பிடித்தது..!!

Read Next

நாவூரும் சுவையில் முட்டை குழம்பு..!! இப்படி செய்தால் துளியும் மிஞ்சாது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular