வேளாங்கண்ணியில் மதம் மாறி மணம் முடித்ததால் மணமகனை வெட்டிவிட்டு மணமகளை கடத்திய குடும்பத்தினரை போலீசார் கைது செய்துள்ளனர். ராகுல் – கீர்த்தனா ஜோடி, பெங்களூருவில் இருந்து வேளாங்கண்ணி வந்து மணம் முடித்துக் கொண்டது. மணமகன் ராகுல் மற்றும் அவரது குடும்பத்தினரை வெட்டிவிட்ட பெண் வீட்டார் மணமகளைத் தூக்கிச் சென்றனர். பெங்களூரு தப்பிச் செல்ல முயன்ற பெண்ணின் தாய், தந்தை உள்பட குடும்பத்தினர் 9 பேரை போலீசார் கைது செய்தனர்.




