Oplus_131072
குழிப்பணியாரம்…..
தேவையான பொருட்கள் :
வாழைப்பழம் – 2
நாட்டு சர்க்கரை 1/2 கப் அல்லது வெல்லம் 1/2 கப்
உப்பு – 1/4 டீஸ்பூன்
ஏலக்காய்த் தூள் – 1/2 டீஸ்பூன்
கோதுமை மாவு – 1 கப்
அரிசி மாவு – 1/4 கப்
முதலில் வாழைப் பழத்தினை தோல் உரித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
பிறகு நாம் எடுத்து வைத்துள்ள பொருள்களான தோல் உரித்த வாழைப்பழம், நாட்டு சர்க்கரை ஏலக்காய்த் தூள், கோதுமை மாவு, அரிசி மாவு மற்றும் தேவைக்கேற்ப உப்பு போன்றவற்றை மிக்சியில் போட்டு தோசை மாவு பதத்திற்கு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
அரைத்து எடுத்துக்கொண்ட மாவை 10 நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும்.
பிறகு குழி பணியார கல்லை அடுப்பில் வைத்து குழிகளில் தேவைக்கேற்ப எண்ணெய் ஊற்ற வேண்டும்.
பின் எண்ணெய் நன்கு சூடானதும் அரைத்து வைத்துள்ள மாவினை பணியார குழிகளில் ஊற்றவும். பிறகு 2 நிமிடங்கள் மூடி வேக வைக்க வேண்டும். பின் திறந்து பணியாரங்களை திருப்பி போட்டு இரண்டு பக்கங்களும் நன்றாக மொறுமொறுவென்று இருக்கும் பதத்தில் நன்கு வேக வைத்து பணியாரங்களை எடுக்க வேண்டும்.
இப்போது சூடாக பணியாரம் ரெடி.




