சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நடிகர் ரவி மோகன் கட்டியுள்ள பங்களா வீட்டிற்கு ஜப்தி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. வீடு கட்ட ஐசிஐசிஐ வங்கியில் கடன் வாங்கியிருந்த நிலையில், தவணையை திரும்ப செலுத்தாததால் வங்கி அதிகாரிகள் இன்று அவரது வீட்டின் நுழைவு வாயில் கதவில் ஜப்தி நோட்டீஸை ஒட்டிச் சென்றனர். கடனுக்கு மாத தவணையை கடந்த 10 மாதங்களாக கட்டவில்லை என கூறப்படுகிறது. கடந்த மாதம் கொரியர் மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்ட நிலையில், ரவி அதனை வாங்க மறுத்துள்ளார்.




