நம்மில் பல பேருக்கு ரீல்ஸ் பார்க்கும் பழக்கம் அதிகமாக இருக்கிறது. அது சிறியது என்றாலும் அதை நாம் பார்க்க தொடங்கி விட்டால் மூழ்கி விடுவது உண்மைதான். இதனால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று நாம் எல்லாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் இப்படி ரீல்ஸ் பார்ப்பதன் மூலம் ஏற்படும் தீமைகள் ஏராளம். இதைக் குறித்து மருத்துவர்கள் என்ன கூறுகிறார்கள் என்று உங்களுக்கு தெரியுமா.
இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பார்ப்பது நமது அன்றாட வேலையாகும். கிடைக்கும் சிறு நேரத்தில் பொழுதுபோக்கிற்காக நாம் இதை செய்து வருகிறோம். மேலும் அதை பார்க்கும் பழக்கம் நம்மில் பல பேருக்கு அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. இது மிகவும் ஆபத்தானது என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இது கண்ணாரோக்கியத்தில் வாழ்நாள் முழுக்க பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
ஆகையால் குழந்தைகள் அதிக நேரம் மொபைலில் மூழ்க விடாமல் தடுக்க வேண்டியது நமது கடமையாகும். இதைத்தான் மருத்துவர்களும் கூறுகின்றனர். நாமும் மொபைல் பயன்பாட்டை குறைத்துக் கொள்வது மிகவும் நன்மையாகும். இல்லையெனில் பெரிய பெரிய பாதிப்புகள் ஏற்பட நேரிடும்.



