ரோஸ் மில்கை வீட்டிலேயே செய்து அசத்த வைக்கும் செய்முறை..!!

வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் குடிப்பதற்கு இதமாக இருக்கும் குளிர்பானங்களை விரும்புகிறார்கள். இப்படி, கடைகளில் குளிர்பானங்கள் குடிப்பது வரவேற்கத்தக்கது இல்லை. இதனால், வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் ரோஸ் மில்க் எப்படி செய்வது என்று இந்த பதிவில் காண்போம்.

தேவையானவை:

பால் – 1/2 லிட்டர்

சர்க்கரை – 100 கிராம்

பாதம் – 10

சப்ஜா விதைகள் – 5 கிராம் ( ஊற வைத்தது )

ரோஸ் எசன்ஸ் – 5 துளிகள்

பன்னீர் – 4 துளிகள்

தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை:

அடுப்பைப் பற்ற வைத்து ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் வைக்கவும். பின், அதில் 1/2 லிட்டர் பால் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். பிறகு அதை குளிர வைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

குளிர வைத்த பாலில் மேலே குறிப்பிட்டுள்ள அளவுகளில் படி சர்க்கரை, தோல் நீக்கி நீல வாக்கில் நறுக்கிய பாதம், ஊற வைத்த சப்ஜா விதைகள், ரோஸ் எசன்ஸ், பன்னீர் ஆகியவற்றை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

இப்போது, இந்த பானத்தை குளிர்சாதனப் பெட்டியில் சிறிது நேரம் வைத்து விடங்கள். அவ்வளவுதான், சுவையான மற்றும் சுலபமான ரோஸ் மில்க் தயார்.

Read Previous

ஆரோக்கியமான முடிக்கு சிறந்த உணவுகள் இதுதான்..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

Read Next

தலைவலி இத்தனை நோய்களுக்கு அறிகுறியா..!! கட்டாயம் பார்க்க வேண்டிய பதிவு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular