பரோட்டா என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. இந்த பரோட்டாவில் பல வேறுபாடுகள் இருக்கின்றன. கொத்து பரோட்டா கிளி பரோட்டா என அனைத்து வகைகளுக்கும் அனைத்து வயதினரும் அடிமையாகி இருக்கின்றன. இந்த வாழை இலை கிளி பரோட்டாவை சாப்பிடும்போது அந்த வாழை இலையில் இருக்கும் நறுமணமும் அதில் தெரியம். அதை எப்படி செய்வதென்று இந்த பதிவில் தெளிவாக காண்போம்.
முதலில் வாழை இலையை அடுப்பில் காண்பித்து லேசாக சூடேற்றவும். அதன்பின் அந்த இலையைப் பிரித்து பரோட்டாவை அதில் எடுத்து வைக்கவும். ஒரு பரோட்டாவிற்கு ஒரு கப் வீதம் பரோட்டாவை முதலில் வைத்து அதன் பின்னர் குருமா ஊற்றி இடையில் வெங்காயத்தையும் தூவிக் கொள்ளவும். அடுத்ததாக கொத்தமல்லி தழை மற்றும் வெங்காயத்தை சேர்த்து துவலாம்.
பக்குவமாக வாழையிலயை மடித்து நாற்கொண்டு அதை கட்டி அடுப்பின் மீது வைக்கவும். சிறிது எண்ணெய் சேர்த்து பாத்திரத்தை வைத்து மூடி வைக்கவும். சிறிது நேரம் கழித்து தோசை போல திருப்பி வைத்து எண்ணெய் சேர்த்து மூட வேண்டும். ஒரு ஐந்து முதல் பத்து நிமிடத்திற்குள் வேகவிட்டு அதை எடுத்து வைக்கவும். அவ்வளவுதான் சுவையான வாழை இலை பரோட்டா தயார்.



