நாம் எப்போதும் தோசை மற்றும் இட்லிக்கு ஒரு வகையான சட்னிகளை செய்து சாப்பிட்டு சலித்து போய் இருப்போம். இன்று வீட்டிலேயே இருக்கும் பொருட்களை வைத்து பத்து நிமிடத்தில் காரசாரமான செட்டிநாடு மிளகாய் சட்னி எப்படி செய்வது என்று இந்த பதிவில் தெளிவாக காண்போம்.
தேவையான பொருட்கள்:
காய்ந்த மிளகாய் – 10
பூண்டு பல் – 3
புளி – நெல்லிக்காய் அளவு
உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
ஒரு ஜாரை எடுத்து மிளகாய் பூண்டு புளி மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். கடாயை எடுத்து அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடான பிறகு கடுகு கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து சட்னியை அதில் போட்டு ஒரு நிமிடம் கிளறி விட்டு இறக்கி விடவும். அவ்வளவுதான் சுவையான செட்டிநாடு ஸ்டைல் மிளகாய் சட்னி தயார்.




