வெறும் வயிற்றில் வெள்ளைப் பூசணிச் சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!!

வெறும் வயிற்றில் வெள்ளைப் பூசணிச் சாறு குடிப்பதால்
கிடைக்கும் பயன்களை பார்ப்போம்.

வெள்ளைச் பூசணியில் வைட்டமின் பி, சி-யுடன், கால்சியம், பொட்டாசியம், இரும்புச்
சத்து, பாஸ்பரஸ் மற்றும் நார்ச்சத்தும் வளமாக நிறைந்துள்ளது. முக்கியமாக இதில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது.பூசணிக்காயில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் உடல் எடையை குறைக்க மிகவும் உதவும், புண்களை ஆற்ற, தழும்புகளை காணாமல் போகச் செய்யவும் பூசணிக்காய் பயன்படும்.பூசணி அடிக்கடி உணவில் சேர்ப்பது நோய் எதிர்ப்பு
சக்தியை தக்க வைக்கும் பூசணிக்காய் விரும்பி
சாப்பிடுபவர்களுக்கு கண்பார்வை சிறப்பாக இருக்கும்.

பயன்கள்

ரத்தசுத்திக்கும், ரத்தக் கசிவு நீங்கவும், வலிப்பு நோய் சீராகவும் குடலில் உள்ள நாடாப்புழுக்கள் வெளியேறவும் உதவும். நுரையீரல் நோய், இருமல், ஜலதோஷம், நெஞ்சுச்சளி, நீரிழிவு, தீராத தாகம்,
வாந்தி, தலைசுற்றல் நீக்கப் பயன்படுகிறது.அல்சர் பிரச்னையால் அவதிப்படுபவர்களுக்கு வெள்ளைப் பூசணி சாறு உடனடி பலனைத் தரும். அதுமட்டுமின்றி, அதிக காரமான
உணவுகள் மற்றும் நீண்ட நேரம் உணவு உட்கொள்ளாமல் இருந்தால் ஏற்படும் அசிடிட்டி போன்ற பிரச்னைகளுக்கு நல்ல மருந்தாக பயன்படுகிறது.

தினமும் காலையில் பூசணிச் சாறுடன் தேன் கலந்து குடித்து வந்தால், வயிற்றில் உள்ள புழுக்கள் வெளியேற்றப்பட்டு, வயிற்றில் தொற்றுகள்
ஏற்படுவதைத் தடுக்கலாம். உடலில் உள்ள கெட்ட நீரை வெயியேற்றவும்,அதிக உடல் எடையை குறைக்கவும் செய்யும். உடல் சூட்டினால் கஷ்டப்படுபவர்கள், தினமும் பூசணிச் சாறு குடித்து வந்தால், உடல் சூடு தணியும். அதுமட்டுமின்றி, உடலில் நீர்ச்சத்து அதிகரித்து, உடல் குளிர்ச்சியுடன் இருக்கும்.

வெள்ளைப் பூசணிச் சாற்றில் தேன் கலந்து தினமும் காலை, மாலை அருந்தி வர, ரத்தம் சுத்தமாகும். இதனால், நோய்த் தொற்றுகள்
ஏற்படாமல் தடுக்கலாம்.சிறுநீரகத்தில் தொற்று ஏற்பட்டு, சிறுநீருடன்
ரத்தம் வெளிவருவது, அல்சரினால் உடலினுள் ரத்தக்கசிவு ஏற்படுவது, பைல்ஸ் போன்றவற்றினால் ஏற்படும் ரத்தக்கசிவு போன்றவற்றிற்கு
வெள்ளைப் பூசணிச் சாறு நல்ல பலனைத் தரும்.சிறுநீரகம் சம்பந்தமான நோய் உள்ளவர்கள் பூசணிக்காய்ச்சாறு 120 மில்லியில் ஒரு தேக்கரண்டி சர்க்கரை அல்லது தேன் கலந்து சாப்பிட்டு வந்தால், நோய்கள் முழுமையாக குணமாகும்.

 

Read Previous

அப்படி என்னதான் இன்பம் பெண்ணிடத்தில்?.. பெண்ணிடம் ஆண் ஏன் இப்படி மயங்கி உருகுகிறான்?.. படித்ததில் பிடித்தது..!!

Read Next

பிள்ளைகளை நேசிப்பதோடு, சுயமாக வாழவும் கூட, நேரத்தையும் சந்தர்ப்பத்தையும் கண்டறிய அனைவரும் கவனம் செலுத்துவது நல்லது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular