15 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்த சுந்தர் சி வடிவேலு கூட்டணி…
தமிழகத் திரை உலகில் தனக்கென ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகர் வடிவேலு மற்றும் நடிகர் சுந்தர் சி நடிகர் வடிவேலின் காமெடிக்கு சிரிக்காதவர்களும் ரசிக்காதவர்களும் யாருமே இல்லை, இதேபோல் நடிகர் சுந்தர் சி இயக்கும் படத்திற்கு தனி ரசிகர் பட்டாளம் உண்டு உண்டு, இதனால் மீண்டும் இணையும் சுந்தர்சி வடிவேலு..
15 ஆண்டுகளுக்குப் பிறகு சுந்தர் சி வடிவேலு வெற்றி கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. பென்ஸ் மீடியா தயாரிப்பில் சுந்தர் சி இயக்கி நடிக்கும் திரைப்படத்திற்கு கங்கர்ஸ் என பெயரிடப்பட்டுள்ளது, இந்த படத்தில் வடிவேலுவின் 63வது பிறந்த நாளை முன்னிட்டு படக்குழு ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்டுள்ளது, கைப்புள்ள வீரபாகுமாது சிங்காரம் என்ற பெயரில் இப்படத்தில் வடிவேலு நடித்திருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன, மேலும் இந்த படத்தில் சிறப்பான காமெடி சம்பவங்கள் இருக்கும் என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர், மிக விரைவில் இந்த படம் திரைக்கு வருவதாக நடிகர் சுந்தர் சி கூறியுள்ளார்…!!




