
கரூரில் தவெக சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, முறையான பாதுகாப்பு வழங்காததே துயர சம்பவத்திற்கு காரணம் என குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், இது தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி பாஜக நிர்வாகி உமா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். உமா தாக்கல் செய்த இந்த மனுவை அக்.10-ம் தேதி உச்ச நீதிமன்றம் விசாரிக்க இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.