மகளிர் உதவி தொகைக்கு மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்ற பொய் தகவலின்படி கூட்டமாக திரண்ட மக்கள்..!!

கலைஞர் மகளிர் உதவித்தொகை ரூபாய் 1000 வழங்கி வந்த நிலையில் சில மகளிர்களுக்கு இன்னும் உதவி தொகை கிடைக்கவில்லை, அவர்களுக்கு மீண்டும் ரூபாய் ஆயிரம் கிடைக்கும் என்றும் அவர்கள் வந்து ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என்று பொய் வதந்திகள் பரவ மக்கள் கூட்டகூட்டமாய் திரண்டனர்..

இத்திட்டமானது 15/09/2023 முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார், இத்திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டம் மகளிர்களுக்கு 5 லட்சத்து 49 ஆயிரத்து 268 மகளிர்க்கு உதவித்தொகை வழங்கி வந்த நிலையில் சமூக ஊடகங்களில் பொய்யாக பரவி வந்த வதந்திகளை நம்பி சேலம் மாவட்டம் மற்றும் சில மாவட்டங்களில் ஆட்சியர் அலுவலகம் முன்பு மக்கள் திரண்டு வந்தனர், இதனால் காவல்துறையினர் மற்றும் உயர் அதிகாரிகள் அப்படி எந்த தகவலும் அரசு வெளிவிடவில்லை, தங்களது கோரிக்கை விரைவில் செயல்படும் என்றும் பொய்யான தகவல்களை பரப்பிய நபர்களை காவல்துறை கைது செய்யும் என்றும் அறிவித்துள்ளது..!!

Read Previous

விவாகரத்துக்குக் காரணமாகும் பெற்றோர்..!! உண்மையா?.. இல்லையா?..

Read Next

பெண்களுக்கு ரூ. 6000 உதவித்தொகை வழங்கும் சூப்பர் திட்டம்..!! மத்திய அரசின் இந்த திட்டம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular