இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்..!! இல்லத்தரசிகள் அதிர்ச்சி..!!
பண்டிகை காலம் நெருங்கி வரும் வேளையில், தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருவதால், தங்கம் வாங்க நினைக்கும் மக்களிடம் இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை விரிவாக கீழே பார்க்கலாம்.
இன்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.600 உயர்ந்து, 1 சவரன் 55,680 ரூபாயாகவும் மற்றும் கிராமுக்கு ரூ.75 உயர்ந்து, 1 கிராம் 6,960 ரூபாயாகவும் மார்க்கெட்டில் விற்பனையாகி வருகிறது. அதேபோல், வெள்ளி 1 கிலோ 98,000 ரூபாயாகவும் மற்றும் 1 கிராம் 98 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டு விற்பனையாகி வருகிறது.



