அரசு ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்..!! மீண்டும் அகவிலைப்படி உயர்கிறது..!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி ஆனது இந்த மாதம் முதல் உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, மத்திய அமைச்சரவையின் முக்கிய கூட்டமானது வரும் செப்டம்பர் 25ம் தேதியன்று நடைபெற உள்ளது. மேலும், அதில், அகவிலைப்படி உயர்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பானது வெளியாகும் என்று பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றன. மேலும், இந்த ஆண்டு ஜனவரி மாதம் DA 4% அதிகரிப்பு நடைமுறைக்கு வந்ததை தொடர்ந்து, மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% ஆக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், நடைபெறவிருக்கும் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் அகவிலைப்படி உயர்த்தப்பட்டால், DA 53% முதல் 54% ஆக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இதோடு வீட்டு வாடகைப் படி, பயணப்படி, மூத்த குடிமக்களுக்கான ரயில் கட்டண சலுகைகள் மற்றும் புதிய உதவி குழு அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Read Previous

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்..!! இல்லத்தரசிகள் அதிர்ச்சி..!!

Read Next

செய்யும் தொழிலில் முன்னேற்றம் வேண்டுமா?.. அப்போ இந்த வழிபாடு செய்யுங்க..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular