இயற்கை முறையில் வீட்டு மருத்துவத்தை வைத்து நமது உடலில் உள்ள நோய்களை நம்மால் அகற்ற முடியும் அவற்றில் சில…
சிறுநீரக பிரச்சனைக்கு சிறுநீரக கல் அடைப்புக்கு மற்றும் சிறுநீர் சரியாக போகாமல் அவதிப்படுபவருக்கு பிரண்டை துவையல் சிறந்த மருந்தாகும், அதேபோல் பார்லியை கஞ்சி காய்த்து குடித்தால் சிறுநீர் தாராளமாக வெளியேறும், மாதுளை பழம் சாப்பிட்டால் ஜலதோஷம் நீங்கும், பலாப்பழம் சாப்பிடுவதன் மூலம் உடல் ஊட்டம் பெறும் நரம்புகள் வலுப்பெறும், பலாவை தேன் கலந்து சாப்பிடுவதால் இதயம் மூளை வளர்ச்சி அடையும். அல்சர் செரிமான கோளாறுகள் குணமடையும், ரத்த அழுத்தம் குறைகிறது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் மேலும் நோய் தொற்று வராமல் தடுப்பதற்கு உடல் சோர்வை நீக்கி புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்வதற்கு பலா சிறந்த மருந்தாகும், இந்த பலாப்பழமானது ஆடி மரத்தில் மட்டுமே அதிகம் விளையக்கூடியவை, வயிற்றுப்புண் நீங்க பீட்ரூட் கிழங்கின் சாறுடன் சிறிது தேனும் கலந்து அருந்தி வந்தால் விரைவில் வயிற்றுப்புண் குணமடையும்…!!



