நமது முன்னோர்கள் காலங்காலமாக சாப்பிட்டவுடன் வெற்றிலை போடும் பழக்கத்திற்கு ஆளாகி உள்ளனர், அதேபோல் அசைவ உணவுகளை சாப்பிட உடன் வெற்றிலையை தருவது வழக்கம் இதற்கு காரணம் ஜீரன் சக்தி நிறைந்தது வெற்றிலை தான், வெற்றிலை சாப்பிடுவதன் மூலம் ஜீரண மண்டலம் சரிவர வேலை செய்து கல்லையும் கரைத்து விடும் தன்மை கொண்டது..
அதேபோல் வெற்றிலை சாறு உடலுக்கு அவ்வளவு நல்லது, வெற்றிலை சார் 5 மில்லியுடன் இஞ்சி சாற்றை 5 மில்லி கலந்து தினமும் காலை வேளையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் ஆஸ்துமா உட்பட்ட நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் வராது, வெற்றிலை மென்று சாப்பிடுவதால் மலச்சிக்கல் நீங்கும் நன்கு பசி உண்டாகும் வாய்ப்புண் வயிற்றுப்புண் நீங்கும், அதே போல் விஷக்கடியால் அவதிப்படும் உயிர்களுக்கு விஷத்தன்மையை முறிக்கும் சக்தி வெற்றிலைக்கு உண்டு, மேலும் விஷ பூச்சிகள் கடித்த இடத்தில் சுண்ணாம்பை தேய்த்தால் உடனே விஷம் தன்மை வெளியேறி உடல் ஆரோக்கியம் அடையும், அதனை தொடர்ந்து வெற்றிலையால் நல்லெண்ணெய் சேர்த்து கற்பூரத்தில் ஒரு சில நிமிடம் காட்டி குழந்தைகள் மார்பு பகுதியில் வைப்பதன் மூலம் சளி நீங்கிவிடும்..!!




