இன்றைய காலகட்டத்தில் நோயின்றி வாழாமல் இருக்க ஆசைப்படுபவர்கள் அதிகம் ஆனால் நோயோடு தான் ஒவ்வொருவரும் தனது வாழ்நாளை நகர்த்திக் கொண்டிருக்கின்றனர், அப்படி இருப்பவர்களுக்கு நோய் வராமலும் வந்த நோய் ஓடுவதற்குமான சிறந்த வழிமுறைதான் இவை..
தூங்கும் பொழுது சுருண்டு படுக்காதீர்கள், உட்காரும்போது வளைந்து கொடுக்காதீர்கள் (வளையாதீர்கள்), நிற்கும்போது நிமிர்ந்து நில்லுங்கள், டூ வீலர் ஓட்டும்போது குனிந்து ஓட்டாதீர்கள் முதுகு வலியை ஏற்படுத்தும் முதுகு தேய்மானத்தை உண்டு பண்ணும், கனமான தலையணைகளை தூக்கி எறியுங்கள் முடிந்தவரை தலைக்கு தலையணை இல்லாமல் சமமாக உடலை வைத்து தூங்கும் பொழுது ரத்த ஓட்டம் பாதத்தில் இருந்து தலைவரை சீராக இருக்கும், தினமும் 23 நிமிடங்கள் வேகமாக நடங்கள் அதாவது உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும், தொடர்ந்து 70 நிமிடத்திற்கு மேல் ஒரே இடத்தில் உட்கார்ந்து இருக்காதீர்கள் அது உடலை வீணாகிவிடும், தினமும் 21 முறை குனிந்து காலைத் தொட்டு நிமிருங்கள், வலுவான பொருட்களை தாங்கும் போது குனிந்து தாக்காதீர்கள் மேலும் தினமும் காலை மாலை 20 முறை கைகளை வான் நோக்கி நீட்டுங்கள் ஆயுள் முழுவதும் நோயின்றி வாழலாம்..!!




