பாஜகவில் இணையும் ஓபிஎஸ்?.. எப்போது தெரியுமா?.. வெளியான முக்கிய தகவல்?..
அதிமுக ஒருங்கிணைப்பு குறித்து தொடர்ந்து பேசி வந்த ஓ. பன்னீர்செல்வம் திடீரென டெல்லிக்கு புறப்பட்டு சென்றுள்ளார். அதிமுகவில் இருந்து ‘ஓபிஎஸ் உள்ளிட்டோரை நீக்கியது நீக்கியது தான்’. ‘மீண்டும் சேர்க்க முடியாது’ என முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கூறியிருந்தார்.
இந்த சூழலில் டெல்லி சென்றுள்ள ஓ. பன்னீர்செல்வம், அமித்ஷா, J.P.நட்டா உள்ளிட்ட பாஜக தலைவர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார். இதனால், அவர் விரைவில் பாஜகவில் இணைவார் என அரசியல் வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது. ஒருவேளை இந்த தகவல் உறுதியாகும் பட்சத்தில் அதிமுகவுக்கு பெரும் நெருக்கடியாக அமையும் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை.




