சமீபத்திய வருடங்களில் நாட்டில் கோடை காலங்களில் வெப்பநிலையானது வழக்கத்தை விட அதிகமாக மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இதே போல் பருவமழை காலங்களில் மற்றும் குளிர் காலங்களில் வழக்கத்தை விட தட்பவெப்ப நிலை மாறி அதிக பாதிப்புகளை மக்களுக்கு ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் தற்போது தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் அவர்கள் நடப்பாண்டு பருவமழை குறித்து தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதன்படி இந்த ஆண்டு பருவமழையானது இயல்பை விட சற்று அதிகமாக இருக்கும் என்றும், வங்கக் கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் மேகமூட்டங்கள் 18 கிலோ. மீட்டர் அகலத்திற்கு படர்ந்ததிருப்பதால், மழைப்பொழிவு அதிகமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.




