கடந்த 2022ம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டபோது, அதை எதிர்த்த ஓ. பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். தற்போது அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு என்ற பெயரில் ஓபிஎஸ் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் இவர் தொடர்பாக ஓர் முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது, அதிமுகவில் மீண்டும் இணைவது குறித்து ஓ. பன்னீர்செல்வம் பேச்சு நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது . இந்த பேச்சுவார்த்தை இறுதிகட்டத்தை அடைந்துள்ளதாகவும், இதனால் விவாத நிகழ்ச்சிகளில் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோருக்கு எதிராக பேசக் கூடாது என ஆதரவாளர்களுக்கு ஓபிஎஸ் தடை போட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது. பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்தால், வரும் டிசம்பர் மாதத்திற்குள் அதிமுகவில் ஓபிஎஸ் சேர வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது.




