நம் முன்னோர்களின் காலகட்டத்தில் இருந்து தூங்குவதற்கு சில நடைமுறைகளை பின்பற்றி வருகின்றனர். அதாவது எந்த திசையில் தலை வைக்க வேண்டும் எந்த திசையில் தூங்க வேண்டும் என்பதெல்லாம் நம் முன்னோர்களின் காலகட்டத்தில் இருந்தே வழக்கமாக வீட்டில் உள்ள பெரியவர்கள் சிறியவர்களுக்கு கூறுவார்கள் .இந்த திசையில் எல்லாம் தலை வைக்கக்கூடாது. இந்த திசையில் தலை வைக்கலாம் என்று கூறுவார்கள். ஆனால் நம்மில் பலருக்கும் ஏன் இந்த திசைகள் தலை வைத்து தூங்க வேண்டும் ஏன் இந்த திசையில் தலை வைத்து தூங்கக் கூடாது என்பது குறித்த கேள்வி நம் மனதில் ஓடிக் கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில் எந்த திசையில் தலை வைத்து தூங்கினால் என்ன பலன் கிடைக்கும் என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
கிழக்கு திசையில் தலை வைத்து தூங்கினால் என்ன பலன் கிடைக்கும்:
கிழக்கு திசையில் தலை வைத்து தூங்கினால் நினைவாற்றல் அதிகரிக்கும். மற்றும் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். மற்றும் சுறுசுறுப்பு அதிகரிக்கும். மனச்சோர்வு குறைந்து சுறுசுறுப்பாக அனைத்து வேலைகளையும் செய்து முடிப்பீர்கள்.
மேற்கு திசையில் தலை வைத்து தூங்கினால் என்ன பலன் கிடைக்கும்:
மேற்கு திசையில் தலை வயது தூங்கினால் அதிகமான செல்வம் சேர வாய்ப்புள்ளது. மற்றும் நம் செய்யும் வேலையில் எதிர்பாராத வாய்ப்புகள் அதிகரித்து புகழ் கிட்டும். பணம், புகழ், வாய்ப்பு இது மூன்றும் மேற்கு திசையில் தலை வைத்து தூங்குவதன் மூலம் நம்மை வந்தடையும்.
தெற்கு திசையில் தலை வைத்து தூங்கினால் என்ன பலன் கிடைக்கும்:
தெற்கு திசையில் தலை வைத்து தூங்கினால், புகழ் செல்வம், வெற்றி, மன நிம்மதி, மற்றும் உடல் ஆரோக்கியம் ஆகியவை கிடைக்கும்.
வடக்கு திசையில் தலை வைத்து தூங்கினால் என்ன பலன் கிடைக்கும்:
நம் வீட்டு பெரியவர்கள் குறிப்பாக வடக்கு திசையை நோக்கி தலை வைத்து தூங்காதீர்கள் என்று கூறுவார்கள். அதற்கு என்ன காரணம் என்றால் வடக்கு திசையில் தலை வைத்து தூங்கினால் அதிகமான அளவிற்கு நோயால் நாம் பாதிக்கப்படுவோம். இதனால் ஆரோக்கிய குறைவு அதிகம் ஏற்படும். ஏன் வடக்கு திசைகள் தலைவில் தூங்கினால் மரணம் கூட நமக்கு நிகழ வாய்ப்பு உள்ளது. எனவே வடக்கு திசையில் தலை வைத்து மட்டும் ஒருபோதும் தூங்கி விடாதீர்கள்.




