நாங்கள் எல்லாம் சிறுவயதில் இதை லிப்ஸ்டிக் பழம் என்று அழைத்துக் கொண்டிருந்தோம்
லிப்ஸ்டிக் கண்டுபிடிப்பதற்கு முன்பே நம் இந்தியாவில் இதை லிப்ஸ்டிக் பழமாக சிறார்கள் பயன்படுத்தியிருப்பார்கள்
உங்களுக்கும் அந்த அனுபவம் இருக்கும் இது
என்ன கீரை என்று பார்த்தவுடன் அறிந்திருப்பீர்கள்
பசலைக்கீரை:
சங்கப் பாடல்களில் தலைவனை பிரிந்த தலைவியின் உடலில் பசலை பூத்தது என்ற வரிகளை காணலாம் அதாவது பிரிவின் காரணமாக அவள் உடல் மெலிவுற்று வளையல்கள் தானாக கழன்று கைகளில் இருந்து விழுந்தன என்ற வரிகளை பார்க்க முடியும்
மனநோய் அந்த அளவிற்கு பாதிப்பை தரக்கூடியது இப்பொழுது இங்கு எதற்காக இதை சொல்கிறேன்
என்று நீங்கள் யோசித்து இருப்பீர்கள்
பசலை என்பது நம் உடலில் இரும்பு சத்து அல்லது ஹீமோகுளோபின் குறைபாடு ஏற்படுவதால் தோன்றுவது அதனாலதானோ என்னவோ இந்த கீரைக்கு பசலை என்று பெயர் வைத்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.
தொடர்ந்து நீங்கள் இதை சமைத்து உணவில் பயன்படுத்தும் பொழுது அளவுக்கு அதிகமாக மற்ற கீரைகளில் இல்லாத அளவில் இதில் இரும்பு சத்து மற்றும் மெக்னீசியம் முதலான சத்துக்கள் நிரம்பிக் கிடக்கின்றன
மேலும் அல்சர் நோயை குணப்படுத்த கூடியது இந்த கீரை..
இதில் சிலோன் பசலை என்ற ஒரு வகை இருக்கிறது அது BP யைக் கூட கட்டுக்குள் கொண்டு வந்து வைக்கும் அதனால் அந்த கீரைக்கு பிபி கீரை என்றே பெயர் உண்டு
இது காய்கறி மார்க்கெட்டில் போய் தேடாதீர்கள் ஒரு இணுக்கு கீரையை கொண்டு வந்து ஒரு தொட்டியில் நட்டு வைத்துக் கொள்ளுங்கள் அவ்வளவுதான் உங்களுக்கு ஹீமோகுளோபின் அளவு 14க்கு மேல் வந்துவிடும்..




