பூசணி மோர் குழம்பு செய்வது எப்படி..??

Oplus_131072

தேவையான பொருட்கள்

தயிர் 1/2 லிட்டர்
மஞ்சள் தூள் 1/4 தே‌க்கர‌ண்டி
உப்பு – தேவைக்கேற்ப
துவரம் பருப்பு – 2 தே‌க்கர‌ண்டி
கடலைப்பருப்பு – 2 தே‌க்கர‌ண்டி
தேங்காய் – 1 மூடி
சீரகம் – 1/4 தே‌க்கர‌ண்டி
தனியா – 1 தே‌க்கர‌ண்டி
இஞ்சி – 1 துண்டு
கடுகு – தேவைக்கேற்ப.
பச்சை மிளகாய் – 9
வெண்மை நிற கல்யாண பூசணிக்காய் – 1 துண்டு.

செய்முறை விளக்கம்

தனியா, துவரம் பருப்பு, கடலைப்பருப்பு, சீரகம், பச்சை மிளகாய் ஆகியவற்றை நீரில் சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும்.பின் மிக்ஸியில் தேங்காய்த் துருவலுடன் ஊற வைத்த பொருட்களையும், இஞ்சியையும் விழுதாக நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
பூசணிக்காயை விதைகளை நீக்கி தோல்சீவி சிறு துண்டுகளாக நறுக்கி வேக வைத்துக்கொள்ள வேண்டும்.அரைத்த விழுது, வேகவைத்த பூசணிக்காய், உப்பு, மஞ்சள் தூள் ஆகியவற்றை கடைந்த தயிருடன் கலந்து கொள்ள வேண்டும்.
பின் அடுப்பில் ஏற்றி ஒரு பொங்கு பொங்கியவுடன் இறக்கி விட வேண்டும். பின் கடுகு தாளித்து கருவேப்பிலை கிள்ளி குழம்பில் போடவும்.இப்போது சுவையான பூசணிக்காய் மோர்க் குழம்பு தயார்.

 

Read Previous

தனுஷ்கோடியில் நிகழ்ந்திருக்கும் இயற்கையின் பெரும் மாற்றம்..!!

Read Next

பூசணி ஜூஸ் செய்வது எப்படி..?? கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular