மனைவியை கொல்வதற்காக நாயை கொன்று ஒத்திகை பார்த்த கணவர்..!!

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் முன்னாள் ராணுவ வீரர் குருமூர்த்தி என்பவர் குடும்ப பிரச்னை காரணமாக தனது மனைவி மாதவியை கொலை செய்து அவரது உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டி, குக்கரில் வேகவைத்து குளத்தில் வீசியுள்ளார். அவரை கைது செய்த போலீசார், குளத்தில் வீசப்பட்ட உடல் பாகங்களை தேடி வருகின்றனர். தனது மனைவியைக் கொல்வதற்கு முன்பு ஒரு நாயை கொன்று அவர் ஒத்திகை பார்த்ததாகவும், த்ரிஷ்யம் உள்ளிட்ட படங்களை பார்த்து இந்த கொலையை அரங்கேற்றியுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Read Previous

தை மாதம் 2025 சுபமுகூர்த்த நாட்கள் இதோ..!! திருமணம் நடத்த இதான் சரியான டைம்..!!

Read Next

234 தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் செல்லும் எடப்பாடி பழனிசாமி..!! அதிமுகவின் அடுத்த மூவ் இதான்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular