செவ்வாழை பணியாரம்..!! குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் ஆரோக்கியமான உணவு..!!

இந்த நவீன காலகட்டத்தில் குழந்தைகளும் கூட ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவதில்லை. பாக்கெட் தீணிகளுக்கும் பீட்சா பர்கர் போன்ற உணவுகளுக்கும் தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். இந்த வகையில் ஆரோக்கியமான செவ்வாழையை பயன்படுத்தி பணியாரம் செவ்வாழை பணியாரம் எவ்வாறு செய்வது என்பதை இந்த பதிவில் நாம் பார்க்கலாம். செவ்வாழை பணியாரம் ஆரோக்கியமான இனிப்பு சுவையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் எவ்வாறு பண்ணுவது வாங்க பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

சேவ்வாழை பழம் பழுத்தது – 2

அரிசி மாவு – 1 கப்

கோதுமை மாவு – 1/2 கப்

வெல்லம் – 1/2 கப்

ஏலக்காய் பொடி – 1/4 தேக்கரண்டி

உப்பு – சிறிதளவு

தண்ணீர் – தேவையான அளவு

எண்ணெய் அல்லது நெய் – பொரிக்க

செய்முறை:

சேவ்வாழை பழங்களை மசித்து, அரிசி மாவு, கோதுமை மாவு, வெல்லம், ஏலக்காய் பொடி, உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.தேவையான தண்ணீர் சேர்த்து மிதமான பதத்தில் மாவை தயாரிக்கவும். பணியாரக் கல்லில் எண்ணெய் அல்லது நெய் விட்டு மாவை ஊற்றி, இரண்டு பக்கமும் பொன்னிறமாக வேகவைத்து எடுக்கவும். அவ்வளவுதான் சுவையான செவ்வாழை பணியாரம் ரெடி. இதை குழந்தைகளுக்கு கொடுத்தால் விரும்பி சாப்பிடுவாங்க கண்டிப்பா உங்க வீட்டுக்கு குழந்தைகளுக்கு இதை கொடுத்து பாருங்க.

 

Read Previous

சர்க்கரை நோய் எப்படி வருகிறது என்று உங்களுக்கு தெரியுமா..?? தெரியவில்லை என்றால் இந்த பதிவை படித்து தெரிந்து கொள்ளுங்கள்..!!

Read Next

தாழ்வு மனப்பான்மையை போக்க சில வழிகள்..!! கண்டிப்பா இதையெல்லாம் ட்ரை பண்ணி பாருங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular