சோகம்.. காபி தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்த பெண்..!! புலி தாக்கி உயிரிழப்பு..!!

கேரளாவில் புலி தாக்கிய பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் மானந்தவாடி பகுதியைச் சேர்ந்த ராதா (45) என்கிற பெண் தொழிலாளி இன்று (ஜன.24) காபி தோட்டத்தில் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது புலி தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். உடன் பணிபுரிந்த தொழிலாளர்கள் புலியை விரட்டி ராதாவின் உடலை மீட்டனர். உயிரிழந்த ராதாவின் குடும்பத்திற்கு ரூ.11 லட்சம் விவரம் அறிவிக்கப்பட்ட நிலையில் அந்த புலியை கொல்ல வனத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ராதாவின் கணவர் வனத்துறையில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Read Previous

ஆந்திரா ஸ்டைல் நல்ல காரம் பொடி சுலபமாக வீட்டிலேயே செய்வது எப்படி..??

Read Next

வாஷிங் மெஷினை நீண்ட நாட்கள் சிறப்பாக பராமரிக்க இந்த குறிப்புகளை எல்லாம் கண்டிப்பா ஃபாலோ பண்ணுங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular