பருத்தி பால் செய்வது எப்படி..?? வீட்டிலேயே சுலபமாக செய்யலாம் எப்படின்னு இந்த பதிவு படிச்சு தெரிஞ்சுக்கோங்க..!!

Oplus_131072

பருத்திப் பால் செய்வது எப்படி..

தேவையான பொருள்கள்

பருத்தி_விதை – 2 கைப்பிடி அளவு
கருப்பட்டி – 100 கிராம்
தேங்காய்ப்_பால் – அரை மூடி
சுக்கு – பாதி விரல் அளவு
அரிசி_மாவு – 2 தேக்கரண்டி
ஏலக்காய் – 2

செய்முறை 🙌

பருத்தி விதையை முதல் நாள் இரவு தண்ணீரில் ஊற வைக்கவும்.

காலையில், ஊறிய விதையை எடுத்து மிக்ஸியில் போட்டு, சிறிது தண்ணீர் விட்டு அரைத்து பால் எடுக்கவும்.

கருப்பட்டியைத் தூளாக்கி, ஒரு கப் தண்ணீர் ஊற்றி காய்ச்சி வடிகட்டிக் கொள்ளவும்

ஓரு பாத்திரத்தில் பருத்தி விதைப் பாலை ஊற்றி காய்ச்சவும்.

ஒரு கொதி வந்ததும் கரைத்து வடிகட்டி வைத்திருக்கும் கருப்பட்டி மற்றும் தேங்காய்ப் பாலை ஊற்றி காய்ச்சவும்.

இந்த கலவை கொதிக்கும் போது அரிசி மாவில் சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து ஊற்றி, கரண்டியால் தொடர்ந்து 2 நிமிடங்கள் கிளறி இறக்கிவிடவும்.

கடைசியாக சுக்கு மற்றும் ஏலக்காயைப் பொடியாக்கி சேர்த்துச் சூடாகப் பரிமாறவும்.

பருத்தி விதையில் பால் எடுத்து 2 மடங்கு தண்ணீர் சேர்த்து ஒரு மடங்காக ஆகும் வரை கொதிக்கவிடவும்.

தேங்காய்ப் பால் சேர்த்த பிறகு அதிக நேரம் கொதிக்க வைக்கக்கூடாது .

Read Previous

தேங்காய் தண்ணீர் மருத்துவம்..!! தேங்காய் தண்ணீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகள் உள்ளதா..?? இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே..!!

Read Next

கணவனுடனான தாம்பத்தியத்தில் மனைவி ஏமாற்றமடைவதற்கான 4 காரணங்கள்..!! கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular