அந்த ஆண் நல்ல வழியில் பிடிக்கப்பட்டிருந்தால் நல்லவிதமாக தெரிவிக்க முயற்சி செய்வாள்.
தீயவழையில் பிடித்திருந்தால் தீயவழியில் சொல்ல முயற்சி செய்வாள்.
ஆணின் தனிப்பட்ட விஷயங்களாகிய பேச்சு, எழுத்து, நடை, உடை, பாவனை இவைகளை ரசிக்க ஆரம்பிப்பாள்.
காரணமே இல்லாமல் சிரித்துக் கொண்டே இருப்பாள்.
“இதுதான் ஆனந்தமோ” இவ்வளவு காலம் இந்த ஆனந்தத்தை நான் உணராமல் விட்டு விட்டேனே, இந்த ஆனந்தத்தை இனிமேல் உணர்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்ற மனப்போக்கிற்குப் போவாள்.
உலகத்தில் இருக்கும் ஒட்டுமொத்த இன்பமும் இதுதான் என அந்த ஆணின் நினைவிலேயே தன் விலையில்லா நேரங்களை நகர்த்துவாள்.
ஒருவேளை காலமும் சூழ்நிலையும் மாறும்போது அந்த ஆணின் மீது அவளுக்கு வெறுப்பு வருமாயின்,
வெறுப்பு வரும் அளவிற்கு சூழ்நிலைகள் அமையும் எனில்
என் பொன்னான நேரங்களையும் என் மனதையும் இவனுக்காக நான் செலவிட்டேனே,
நான் இவனுக்காக காத்திருந்தேனே,
என்னை உதாசீனம் செய்கிறானே,
இவனுக்காக நான் ஏங்கிய ஏக்கமெல்லாம் பொய்யாயிற்றே,
நான் செலுத்திய அன்பு எல்லாம் குப்பையாயிற்றே,
என்று மன வருத்தமும் கொள்வாள்.
இந்த உலகில் அதி உன்னதமான விஷயங்கள் எவ்வளவோ உள்ளன.
கற்றது கை மண்ணளவு கற்க வேண்டியது உலகளவு ஆகையால் பார்த்த மாத்திரத்தில் திரையில் காணும் நடிகை நடிகர்களை மனம் விரும்புவது போல், பார்த்த மாத்திரத்தில் நிஜ வாழ்க்கையிலும் ஒருவனை அல்லது ஒருவரை நமக்கு பிடித்து விட்டால் கிட்டத்தட்ட ஒரு மனநலம் பாதித்தவரைப் போலவே நடந்து கொள்வோம்…
(இது ஒரு பொதுவான பதிவு, தனிப்பட்ட முறையில் யாரையும் குறிப்பிடுவது அல்ல)




