என்னிடமே என்னை தந்துவிடு
உன்னை நினைக்க வைத்து என்னை
வீதியோரம் உட்கார வைத்து விட்டாய்….
என் நினைவுகளை பறித்துக்கொண்டு
உன் நினைவுகளை என்னுள் புகுத்தி விட்டாய்…..
இரக்கமில்லாமல்
என்னுள் இருந்து
என்னை பிரித்து
உன்னுடைய பாசத்திற்காக
என்னை ஏங்க வைத்து விட்டாய்..
என் விழிகளின் ஓரம்
கண்ணீர் அருவியாய் நனைக்கிறது….
உன்னை நினைத்து
என் உடல் எல்லாம்
வெப்பமாய் இருந்து எரிந்து கொண்டிருக்கிறது.
எங்கே சென்றாய் என்னை விட்டு…..
உன்னை இழந்த பிறகு
பசி
தூக்கம்
உணவு ஏதுமில்லை உந்தன் நினைவால்,
என்னிடத்தில் தானே என்னை காணவில்லை..
உன் நினைவுகள் தினமும் அலையாய் அடித்துக் கொண்டிருக்கிறது என் மனதில்
எனக்கு ஒரு உதவி செய்வாயா?
என்னை மீட்டெடுத்து என்னிடமே கொடுத்த விடு….
உனக்கு நன்றி கடன் பட்டிருப்பேன்….




