அழகான நட்பு..!! யார்யாரோ உன்னோடு மணிக்கணக்காய் பேசிச் சிரிக்கையில்..!! படித்ததில் பிடித்தது..!!

💕❤️யார்யாரோ உன்பெயரை அத்தனை

உரிமையோடு அழைக்கையில்

யார்யாரோ உன்னருகில் அத்தனை உரிமையோடு அமர்கையில்

யார்யாரோ உன்னிடம் அத்தனை

சிநேகமாய் கை குலுக்கையில்

யார்யாரோ உன்னோடு மணிக்கணக்காய் பேசிச் சிரிக்கையில்

யார்யாரோ உன்னை அத்தனை அக்கறையாய் நலன் விசாரிக்கையில்

யார்யாரோ உன்னை நினைத்தவுடன்

தொலைபேசியில் அழைத்துப்பேசுகையில்

 

நானோ யாரோவைப்போல்

அத்தனையையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறேனே

உள்ளுக்குள் ஒரு கதறல் ஒடு

 

இந்தப்பிரபஞ்சவெளியில்

உனக்கும் எனக்குமிடையில் மட்டும்

ஏன்தானோ இத்தனை இடைவெளிகள்

சிநேகமாய் பேசுவதற்கும் புன்னகைப்பதற்கும்

நலன் கேட்பதற்கும்

ஏனோ

அவ்வளவு மன உறுத்தல்கள்…

 

உன்னோடு

யாரோ பேசுகையில்

யாரோ கைகுலுக்கையில்

யாரோ அருகில் அமர்கையில்

யாரோ நலன் கேட்கையில்

எனக்குள்

எட்டிப்பார்க்கத்தான்செய்கிறது

என்னைத் தேம்பச்செய்யும்

பொறாமை…💔💔💔

Read Previous

என்னை மீட்டெடுத்து என்னிடமே கொடுத்த விடு..!! படித்ததில் பிடித்த வரிகள்..!!

Read Next

கண்ணாடி தத்துவம்.. இவை உங்களின் மனதை அலங்கரிக்கும்..!! படித்ததில் மிகவும் பிடித்தது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular